×

உள்ளாட்சி அமைப்புகளின் டாஸ்மாக் கடைகளை முறைப்படுத்த சட்டம் கொண்டு வர வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் டாஸ்மாக் கடைகளை முறைப்படுத்துவது குறித்து தமிழக அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளினால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அரசியல் அமைப்பு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் கிராம பஞ்சாயத்து தலைவர் தீர்மானம் நிறைவேற்றியதை ஏற்று, தமிழக அரசு சட்டம் கொண்டுவர உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதை தேமுதிக சார்பில் வரவேற்கிறோம்.

எனவே, பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் நலன் கருதி, தமிழக அரசு  உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் டாஸ்மாக் கடைகளை முறைப்படுத்தவும், கால நேரத்தை வரையறை செய்யவும் இதுபோன்று சட்டம் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் நமது காலாச்சாரம், இளைஞர்களின் எதிர்காலம், பெண்களின் பாதுகாப்பு போன்றவை பாதுகாக்கப்படும்.  மேலும் பாலியல் வன்கொடுமை, சாலை விபத்துகள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே தமிழக அரசு உயர் நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று உடனடியாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Vijayakanth ,task force stores , Local Authorities, Task Shops, Vijayakanth
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...