பெரியாரை பற்றி பேசும்போது ரஜினி சிந்தித்துபேச வேண்டும்: டி.ராஜா பேட்டி

சென்னை:சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் பொது செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். பின்னர் பொது செயலாளர் டி.ராஜா கூறியதாவது: நாடு முழுவதும் சி.ஏ.ஏ, என்ஆர்சி, என்பிஆருக்கு எதிராக போராடிய பலர் இறந்து இருக்கிறார்கள். தேசிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்து செல்வது குறித்து திமுகவுடன் ஆலோசித்து இருக்கிறோம்.  குடியுரிமை சட்டம்  என்பது ஏழைகளுக்கு எதிரானது  சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்  ஒருமுகப்படுத்தி பார்க்கும்போது இது ஏழைகளுக்கு எதிரானது.குடியுரிமை சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது மட்டும் இல்லை. இது அனைத்து ஏழைகளுக்கும் எதிரானது.  ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் கருவியாக பிஜேபி செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் பாசிச  தாக்குதல், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக  தொடர்ந்து அனைவரும் போராட வேண்டும்.

திமுகவிற்கு குடியுரிமை சட்டத்தை பற்றி தெளிவான பார்வை இருக்கிறது. காங்கிரஸ் உடன் கூட்டணி குறித்து அவர்கள் பேசி தீர்த்துக்கொள்வார்கள். குடியுரிமை சட்டத்தை பொறுத்தவரை மத்திய  அரசு பொய்களை பரப்பி வருகிறது. எதிர்கட்சிகள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை தூண்டவில்லை. மக்களே தன்னெழுச்சியாக முன்வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ரஜினி பெரியாரை பற்றி பேசும்போது சிந்தித்து பேச வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories: