சூறைக்காற்று கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் சூறைக்காற்றால் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. கன்னியாகுமரியில் நேற்று பலத்த காற்று வீசியது. சுமார் 40 கி.மீ. அளவுக்கு சூறைக்காற்று வீசியதால்  விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு பூம்புகார் போக்குவரத்து கழகம்  படகு சேவையை ரத்து செய்தது. இதனால் காலையில் வந்த சுற்றுலா  பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பலத்த காற்று வீசுவது நின்றால் மீண்டும் படகு  போக்குவரத்து தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் மாலை வரை காற்றின் வேகம் குறையாததால் படகு சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: