திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல்,..குப்பை கொட்டுபவர்களிடம் கட்டணம் வசூல்

* தரம் பிரித்து அளிக்காவிட்டால் அபராதம்

* 3 மாதத்தில் நடைமுறைக்கு வரும்

சென்னை: திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி குப்பையை உருவாக்குபவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கவும், தரம் பிரித்து அளிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்களும், 200 வார்டுகளும் உள்ளன. இவற்றிலிருந்து நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பை பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் கொட்டப்படுகிறது. அதுமட்டுமின்றி குப்பையை தரம் பிரித்து, மக்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை சிமென்ட் மற்றும் தார் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகிறது.

சென்னையில் தற்போது, 60 சதவீத மக்கள் மட்டுமே குப்பையை தரம் பிரித்து வழங்குகின்றனர். இதனை முழுமையாக முறைப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு திடக்கழிவு மேலாண்மை விதிகளை உருவாக்கியது. இந்த விதிகளின்படி பொது இடத்தில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம், குப்பையை உருவாக்குபவர்களிடம் இருந்து கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம். இதன்படி திடக்கழிவு மேலாண்மை விதிகள் உருவாக்கப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, வீடுகளுக்கு ஒரு மாதத்திற்கு 10 முதல் 100 வரை கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வணிகநிறுவனங்களுக்கு 1000 முதல் 5 ஆயிரம் வரையும், நட்சத்திர விடுதிகளுக்கு மாதம் ஒன்றுக்கு 300 முதல் 3 ஆயிரம் வரையும், தியேட்டர்களுக்கு 750 முதல் 2 ஆயிரம் வரையும், அரசு அலுவலகங்களுக்கு 300 முதல் 3000 வரையிலும், தொழில் உரிமம் பெற்ற பல்வேறு கடைகள் 500 முதல் 1000 வரையிலும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலும், மருத்துவமனை மற்றும் நர்சிங் ேஹாம்களுக்கு 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரையிலும், தனியார் பள்ளிகளுக்கு 500 முதல் 3000 ஆயிரம் வரையிலும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி குப்பையை பொது இடத்தில் கொட்டுபவர்களுக்கு 500, தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு 500 முதல் 5000, கட்டுமான கழிவுகளை சட்ட பொது இடத்தில் கொட்டினால் 2000 முதல் 5000, குப்பை எரித்தால் 500 முதல் 2000 அபராம் விதிக்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்த விதிகளுக்கு தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த விதிகள் அடுத்த மூன்று மாதங்களில் அமலுக்கு என்று மாநகராட்சி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும். இதன்பிறகு இந்த விதிகள் அமல்படுத்தப்படும்.

அபராதம் வகை கட்டணம்

பொது இடத்தில் குப்பை கொட்டுதல்    500

தரம் பிரித்த அளிக்க தவறுதல்    100 -5000

கட்டிட கழிவுகளை பொது இடத்தில் கொட்டுதல்    2000- 5000

குப்பையை எரித்தல்    500 - 2000

பொது இடத்தில் எச்சில் துப்புதல்    100

கட்டணம் எவ்வளவு?

குடியிருப்பு    10 - 100

வணிக இடம்    1,000 - 7,500

உணவு விடுதி    300 - 3,000

தியேட்டர்    750 - 2,000

அலுவலகங்கள்    300 - 3,000

வணிக உரிம கடைகள்    200 - 1,000

நிகழ்ச்சிகள் (பொது இடத்தில்) 5,000 - 20,000

மருத்துவமனைகள்    2,000 - 4,000

கல்வி நிறுவனங்கள்    500 - 3,000

Related Stories: