அட்லஸ் சைக்கிள் நிறுவனரின் மனைவி தற்கொலை

புதுடெல்லி: சைக்கிள் தயாரிப்பில் 70 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள புகழ்பெற்ற நிறுவனம் அட்லஸ். இது டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இதன் உரிமையாளர் சஞ்சய் கபூர். இவரது மனைவி நடாஷ் கபூர் (57). சஞ்சய் கபூரின் வீடு டெல்லியில் உள்ளது. இந்நிலையில் சஞ்சய் கபூர் வீட்டில் இல்லாத நேரத்தில், நடாஷ் கபூர் பேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது வீட்டின் மற்றொரு அறையில் அவரது மகள் மற்றும் மகன் இருந்துள்ளனர். அவர் எதற்காக திடீரென தற்ெகாலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : founder ,Atlas Bicycle ,Suicide Wife , Suicide , wife ,Atlas Bicycle founder
× RELATED ஓசூரில் பரபரப்பு ரவுடி மனைவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி