டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சொத்து 1.3 கோடி அதிகரிப்பு : தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் சொத்து 1.3 கோடி அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதில், தனக்கு 3.4 கோடி சொத்து உள்ளதாக  தெரிவித்துள்ளார். கடந்த 2015ல் கெஜ்ரிவால் சொத்து மதிப்பு 2.1 கோடியாக இருந்தது. கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலின் ரொக்கம் மற்றும் நிலையான வைப்பு தொகை 15 லட்சமாக இருந்தது. 2020ல் 57 லட்சமாக அதிகரித்துள்ளது.

முதல்வர் கெஜ்ரிவாலின் ரொக்கம் மற்றும் வைப்பு தொகை 2015ல் 2.26 லட்சத்திலிருந்து 2020ல் 9.65 லட்சமாக அதிகரித்துள்ளது. அவரது மனைவியின் அசையாச் சொத்துகளின் மதிப்பில் எந்த மாற்றமும் இல்லை. அதேநேரம் கெஜ்ரிவாலின் அசையாச் சொத்துகளின் மதிப்பு 92 லட்சத்திலிருந்து 1.77 கோடியாக அதிகரித்துள்ளது.

Related Stories: