மகாராஷ்டிரா பள்ளிகளில் ‘மராத்தி’ கட்டாயம் : புதிய சட்டம் இயற்ற அரசு முடிவு

மும்பை: மகாராஷ்டிரா மாநில கைத்தொழில் மற்றும் மராத்தி மொழி அமைச்சர் சுபாஷ் தேசாய் மும்பை மராத்தி பத்ராகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசியதாவது: சட்டப்பேரவையின் அடுத்த கூட்டம் பிப்ரவரியில் நடைபெறும். அதில் அரசு ஒரு சட்டத்தை உருவாக்கும். அனைத்து பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மராத்தி மொழியைக் கற்பிப்பது கட்டாயமாக்கப்படும். மாநிலத்தில் 25,000 ஆங்கிலவழி நடுத்தர பள்ளிகள் உள்ளன. அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மேலும், ஆங்கிலவழி பள்ளிகளில் மராத்தி கற்பிக்கப்படுவதில்லை. விருப்ப பாடமாக மட்டுமே வைக்கப்படுகிறது. இனிமேல், அனைத்து பள்ளிகளிலும் மராத்தி கற்பித்தல் கட்டாயமாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: