நடப்பாண்டில் முதல் முறையாக முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி

காட்டுமன்னார்கோவில்:   கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ளது வீராணம் ஏரி. இதன் முழு கொள்ளளவு 47.50 அடியாகும். விவசாய பயன்பாட்டிற்காக சோழர்கள் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஏரி நடப்பு ஆண்டில் முதன் முறையாக அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியுள்ளது. கீழணையில் திறக்கப்படும் காவிரிநீர் வடவாறு வழியாக விநாடிக்கு 450 முதல் 2600 கனஅடிகள் வரை அதிகரிக்கப்பட்டு வீராணம் ஏரியை வந்தடைந்தது. ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் சென்னை மக்களுக்கு வரும் கோடையில் தங்குதடையின்றி குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்துள்ளது.

மேலும் நடப்பு ஆண்டு குறுவை நெல் சாகுபடி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடிநீர் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்பதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியதால் எதிர்வரும் கோடைகாலங்களில் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி, பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் என்றும் எதிர்வரும் குறுவை நெல் சாகுபடி செய்வதற்கு தண்ணீர் கிடைக்கும் என்றும் விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Related Stories: