×

சமூக வலைதளத்தில் ஆபாச கருத்து பதிவு

* எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
* போலீஸ் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சமூக வலைதளங்களில் ஆபாசமாக கருத்துகளை பதிவு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த மருதாசலம் என்பவர் நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைதளத்தில் சில கருத்துகளை பதிவிட்டு இருந்தார். இதுதொடர்பாக அவரை போலீசார் கைது செய்தனர். சிறையில் 70 நாட்களுக்கு மேல் இருக்கும் மருதாசலம் தனக்கு ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, சமூக வலைதளங்களில் ஆபாச வார்த்தைகளை போட்டு கருத்து தெரிவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிப்பட்ட முறையிலோ, கட்சியினர் மீதோ, அதிகாரிகள் மீதோ, நீதித்துறையை சார்ந்தவர்கள் மீதோ சமூக வலைதளங்களில் ஆபாசக் கருத்துகளை வெளியிடுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இதுவரை எத்தனை பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது? இதுகுறித்த தகவல்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார்.

Tags : persons , Social website, porn, comment, post
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...