பிரித்வி, சாம்சன் அதிரடியில் இந்தியா ஏ அபார வெற்றி

லிங்கன்: நியூசிலாந்து ஏ அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் (அதிகாரப்பூர்வமற்றது), இந்தியா ஏ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பெர்ட் சட்கிளிப் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பந்துவீசியது. நியூசிலாந்து ஏ அணி 48.3 ஓவரில் 230 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. ரச்சின் ரவிந்திரா 49, கேப்டன் டாம் புரூஸ் 47, கோல் மெக்கான்சி 34*, பிலிப்ஸ் 24, ஜேமிசன் 19 ரன் எடுத்தனர். இந்தியா ஏ பந்துவீச்சில் முகமது சிராஜ் 3, கலீல் அகமது, அக்சர் பட்டேல் தலா 2, விஜய் ஷங்கர், ராகுல் சாஹர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Advertising
Advertising

இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 231 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா ஏ அணி 29.1 ஓவரிலேயே வெற்றியை வசப்படுத்தியது. பிரித்வி ஷா 48 ரன் (35 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), மயாங்க் அகர்வால் 29, கேப்டன் ஷுப்மான் கில் 30, சஞ்சு சாம்சன் 39 ரன் (21 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), சூரியகுமார் யாதவ் 35 ரன் (19 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர். விஜய் ஷங்கர் 20, குருணல் பாண்டியா 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஏ 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நாளை நடக்கிறது.

Related Stories: