ஜிஎஸ்டிஆர் 3பி தாக்கல் செய்ய 3 தேதிகள் அறிவிப்பு

புதுடெல்லி: ஜிஎஸ்டிஆர் 3பி படிவம் மாதந்தோறும் தாக்கல் செய்ய, ஆண்டு வர்த்தகத்துக்கு ஏற்ப 3 தேதிகளை நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. மாதாந்திர ஜிஎஸ்டி கணக்கு விவரங்களை, ஜிஎஸ்டிஆர் 3பி படிவத்தில், ஒவ்வொரு மாதமும் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், ஒரே நேரத்தில் கணக்கு தாக்கல் செய்வதால் இணையதளம் முடங்கி விடுகிறது. கடந்த 20ம் தேதியும் இதே பிரச்னை ஏற்பட்டது. இதை தவிர்க்க, ஆண்டு வர்த்தகத்துக்கு ஏற்ப 3 தனித்தனி தேதிகளை நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

இதன்படி, முந்தைய நிதியாண்டில் ரூ.5 கோடிக்கு மேல் ஆண்டு வர்த்தகம் செய்பவர்கள் மாதந்தோறும் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டு வர்த்தகம் ரூ.5 கோடிக்கு கீழ் உள்ளவர்களில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், குஜராத், டாமன் டையூ, தாத்ரா ஹவேலி, லட்சத்தீவு உள்ளிட்ட 15 மாநிலம்/ யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் 22ம் தேதிக்குள்ளும், டெல்லி உட்பட 22 மாநிலம்/ யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் மாதந்தோறும் 24ம் தேதிக்குள்ளும் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என நிதியமைச்சகம் கூறியுள்ளது.

Related Stories: