ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு இந்தியா என்ற நாடே இல்லை: பாரத நாடு இயற்கையானது: பாலிவுட் பிரபலங்கள் இடையே மோதல்

மும்பை: ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு இந்தியா என்ற கருத்தோ, நாடோ இல்லை என்று கூறிய பாலிவுட் நடிகர் ஷயிஃப் அலி கானுக்கு நடிகை கங்கனா ரனாவுத் கண்டனங்களை தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு  வெளியான தன்ஹாஜி (Tanhaji) திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடிகர் ஷயிஃப் அலி கான் நடித்துள்ளார். வரலாற்றில் ந்டந்த உண்மை சம்பவத்தை அடைப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில், சினிமா விமர்சகர் அனுபமா ஷோப்ராவுடன், ஷயிஃப் அலி கான் கலந்துகொண்டார்.

அப்போது அவர் தற்போது நிலவும் சமூக அரசியல் சூழலைப் பற்றி கருத்து தெரிவித்தார். அதில், தன்ஹாஜி திரைப்படம் கற்பனை கதையை மையமாக கொண்டே எடுக்கப்பட்டு இருக்கும் என்றும் அது வரலாறாக இருக்க வாய்ப்பில்லை என்றும்  கருத்து தெரிவித்தார். மேலும் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்ற கருத்தும், நாடும் இல்லை எனவும் கூறினார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவுத், ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பே பாரதம் என்ற நாடு இருந்ததாக கூறியுள்ளார். மேலும் பாரதம் என்ற நாடு இல்லாமல் இருந்திருந்தால் மகாபாரதம் என்ற 5000  ஆண்டுகள் பழமையான புராணம் எப்படி எழுதப்பட்டிருக்கும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மகாபாரத காலத்திலேயே பாரத நாடு இருந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ஸ்ரீ கிருஷ்ணர் மகாபாரதத்தில் இருந்துள்ளார் அதனால் தான் அது மகா (பெரிய) பாரதம் என்று அழைக்கப்படுவதாகவும் கூறினார். இதனால் பாரதம் என்ற நாடு என்பது இயற்கையானதே எனவும் நடிகை கங்கனா ரனாவுத் கூறினார்.  இதனால் ட்விட்டர் சமூக வலைதள பக்கத்தில் நடிகர் ஷயிஃப் அலி கானுக்கு ஆதரவாக அவரது ரசிகர்களும், கங்கனா ரனாவுத்துக்கு ஆதரவாக அவரது ரசிகர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

Related Stories: