அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான டெட் தகுதி தேர்வு ஜூன் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடைபெறும்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

சென்னை: 2020- 2021 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி நடப்பாண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு ஜூன் 27, 28 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணியிடக்ஙளுக்கான தேர்வு மே 2 மற்றும் 3ம் தேதி நடைபெற உள்ளதாகவும் டிஆர்பி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பானை கடந்தநவம்பரில் விரிவாக வெளியிட்டுள்ளது. இதேபோல் தமிழகம் முழுவதும் 97 காலியிடங்கள் உள்ள வட்டார கல்வி அலுவலர்கள் பணிக்கு பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் முறைகேடு புகாரால் ரத்து செய்யப்பட்ட ஆயிரத்து 60 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு மே 2 மற்றும் 3-ம் தேதிகளிலும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டுள்ளது. மேலும் முதுநிலை ஆசிரியர் பணி தேர்வு ஜூலை 1- ஆம் தேதியும், இடைநிலை ஆசிரியர் பணி தேர்வு ஜூலை 9- ஆம் தேதியும் நடைபெறுகிறது. பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 17- ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு //trb.tn.nic.in/ என்ற இணையதள முகவரியை அணுகலாம் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் படிக்க வேண்டிய பாட அட்டவணை (syllabus) மற்றும் வினாத்தாள் வகைகள் போன்றவை www.trb.in.nic.in என்ற இணையதளத்தில் பார்க்க முடியும். தேர்வு காலிபணியிடங்கள், தகுதி,. வயது வரம்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: