×

புதுச்சேரியில் சிறைக் காவலர்கள் 4-பேர் பணியிடை நீக்கம்...: சிறைக் கைதிகளுக்கு செல்போன் விற்றதால் நடவடிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறைக் கைதிகளுக்கு செல்போன் விற்பனை செய்ததால் 4 சிறைக் காவலர்கள் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காலப்பட்டு மத்திய சிறையில் இருக்கும் கைதிகள் செல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பதாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பணத்திற்காக சிறைக் காவலர்களே கைதிகளிடம் செல்போன் விற்றது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறை காவலர்களான சபரி, சங்கர், சீனு மற்றும் ராமசந்திரன் ஆகியோரை பணியிட நீக்கம் செய்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு சிறை கைதி நித்திஷ் ஷர்மா புதுச்சேரி மத்திய சிறையில் இருந்துகொண்டே செல்போன் மூலம் புதுச்சேரி ஆளுநர் மாளிகை மற்றும் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியாது.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் மூலம் ஆளுநர் மாளிகை வளாகம் மற்றும் புதுச்சேரி ரயில் நிலையம் மற்றும் ரயில்களிலும் சோதனை செய்தனர். சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்பட்டவில்லை. இதனையடுத்து போனில் வந்த மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. புதுச்சேரி மத்திய சிறையில் இருந்துகொண்டே செல்போன் மூலம் மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.


Tags : Prisoners ,Puducherry , Prisoners , Puducherry, dismissed , 4
× RELATED வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு...