வடசென்னை அனல் மின்நிலைய ஊழியர்கள் பிச்சை எடுத்து போராட்டம்..:சேமிப்பு தொகையை வழங்கவில்லை எனக் குற்றச்சாட்டு

வடசென்னை: வடசென்னை அனல் மின்நிலையத்தில் தொழிலாளர்களின் வைப்பு தொகையே முறையாக வழங்கவில்லை என கூறி ஊழியர்கள் பிச்சை எடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.  வடசென்னை அனல் மின்நிலையத்தில் நிரந்தர பணியாளர்களாக 1200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தொழிலாளர்களின் வைப்பு தொகையை 6 மாதங்களாக வழங்கவில்லை என கூறி வடசென்னை அனல் மின்நிலைய ஊழியர்கள் கையில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆண்டிருக்கு ரூ.2500 கோடி வருமானம் ஈட்டி வந்த அனல் மின்நிலையம், அரசின் தவறான நிர்வாக மேலாண்மையால் சிதைந்துள்ளதாகவும் தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். உடனடியாக தொழிலாளர்களுக்கு பண பலனை வழங்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

Related Stories: