குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்: 8 வடகிழக்கு மாநிலங்களிலும் பரபரப்பு நிலவுகிறது!

அசாம்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்கள் முழுவதிலும் கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் கொதிப்புடன் காணப்படுகின்றன. இந்நிலையில் அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுராவில் மாநகர அமைப்பினர் கல்லூரிகளை மூடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த 8 வடகிழக்கு மாநிங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அசாமில் காலை முதலே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தொங்கிவிட்டன.

கவுகாத்தியில் காட்டன் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை முழுவதுமாய் திரும்பப் பெறும் வரையில் போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மாணவர் அமை்பபுகளின் கூட்டு போராட்டத்தால் வடகிழக்கு மாநிலங்களில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் வழக்கின் விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.Tags : Northern States , Citizenship Amendment Act, Students, protest , Northeastern States
× RELATED பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சி