×

காஞ்சிபுரத்துக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர்களை தீவிரவாதிகள் என தவறான செய்தி..: காவல்துறை எச்சரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்துக்கு சுற்றுலா வந்தவர்களை தீவிரவாதிகள் என சமூகவலைதளங்களில் தவறான செய்தி பரப்பியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சில மாதங்களாக தமிழகத்தில்  தீவிரவாதிகள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக காவல்துறை விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ளும் சில சமூகவிரோதிகள், சமூகவலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

கடந்த வாரம் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த இஸ்லாமியர்கள் 2 பேரை தீவிரவாதிகள் என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் சமூகவலைதளங்களில் செய்தி ஒன்று பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்து.

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக சென்னை வந்த கான் மற்றும் அப்துல்லா காஞ்சிபுரத்தை சுற்றி பார்க்கச் சென்ற போது காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் அருகே சென்றுள்ளனர். அதனை அடுத்து அவர்கள் சிகிச்சை முடித்துக்கொண்டு தங்கள் நாட்டுக்கு திரும்பி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் தீவிரவாதி இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது போன்ற தவறான தகவல்களை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Foreigners ,Kanchipuram ,terrorists , Foreigners , traveled, Kanchipuram , terrorists
× RELATED கட்டவாக்கத்தில் வாக்களிக்க வர...