அரசு பள்ளிகளில் 5, 8-ம் வகுப்பு பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணத்தில் இருந்து விலக்கு: தொடக்க கல்வி இயக்குனர்

சென்னை: 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது போல், 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.மேலும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் வேறு பள்ளிகளில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

5 ஆம் வகுப்புக்கு 1 கிமீ சுற்றளவுக்குள்ளும், 8 ஆம் வகுப்புக்கு 3 கிமீ சுற்றளவுக்குள்ளாகவும் தேர்வு மையங்கள் அமைப்பதற்கு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியது. இதற்கும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியது. பின்னர், 5, 8 பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் வேறு பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்தந்த பள்ளிகளிலே தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் கூறியதாவது; 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கு, அந்தந்த பள்ளிகளிலே தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளிகளை தவிர்த்து, தனியார் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 100 ரூபாய் என்றும், 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 200 ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>