×

முதலாம் மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா?

உடுமலை: உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து 27ம் தேதி தண்ணீர் திறக்கக் கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. இந்த அணைக்கு பொள்ளாச்சி சர்க்கார்பதியில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டுவந்து நிரப்பப்படுகிறது. பி.ஏ.பி. பாசன திட்டத்தில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.75 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நான்கு மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் நான்காவது மண்டல பாசனம் சமீபத்தில் நிறைவு பெற்றது. இதையடுத்து, முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, பொதுப்பணித்துறை சார்பில், வரும் 27ம் தேதி தண்ணீர் திறக்க கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Thirumurthi Dam , Thirumurthi Dam , water , opened for the first zone , irrigation?
× RELATED மண் மேடாக காட்சி அளிக்கும் கிழக்கு...