அதிகாரிகளின் அலட்சியத்தால் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மூணாறு வீதியில் தாராளம்

மூணாறு: மூணாறில் ஜனவரி 1ம் தேதி முதல் பொருட்கள் விற்பனை செய்வது பொது இடங்களில் கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது பல ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறிய நிலையில், முக்கிய சாலைகளில் மீண்டும் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து காணப்படுவது குறித்து புகார் எழுந்துள்ளது. ,அதிகாரிகளில் அலட்சிய போக்கை காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தென்னகத்து காஷ்மீர் மூணாறில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக கேரள அரசு நடைமுறை படுத்திய உத்தரவின் அடிப்படையில் மூணாறில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடை செய்ய பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. தேவிகுளம் துணை ஆட்சியர் பிரேம் கிருஷ்ணன் தலைமையில் வியாபாரிகள், மூணாறு காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் கிராம நிர்வாக தலைவர் பஞ்சாயத்து செயலாளர் போன்றவர்கள் பங்கெடுத்த பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்வது குறித்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

இதில் முதல் கட்டமாக ஜனவரி 1-ம் தேதி முதல் 500 லீட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்ய முடியும். கூடுதல் அளவில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் வைத்திருப்போர் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும், முக்கிய சுற்றுலா தளங்களில் குப்பைகளை கொட்டுவதை தடை செய்ய பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருப்பது தெரியவந்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை பிடிபட்டால் 25 ஆயிரம் அபராதமும்,மூன்றாவது முறையாக பிடிக்கப்பட்டால் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் மூணாறில் முக்கிய பகுதியான இக்க நகர் செல்லும் சாலையில் மீண்டும் பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது. பிளாஸ்டிக் பயன்படுத்தும் வியாபாரிகளிடம் அபராதம் விதிக்கும் அதிகாரிகள், பொது இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதை கண்டும் காணாமல் அலட்சியமாக இருப்பது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: