பாபநாசம்: பண்டாரவாடை சாலையோரம் உள்ள அல்லி குளத்தை சுற்றி தடுப்பு சுவர் கட்ட வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணம்- தஞ்சாவூர் மெயின் சாலை பாபநாசம் அருகே பண்டாரவாடை ஆர்ச் அருகில் அல்லி குளம் உள்ளது. கும்பகோணம்- தஞ்சாவூர் மெயின் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.