மேட்டூர் அருகே தொழிலதிபர் கொலை வழக்கு...: கள்ளத்தொடர்பால் கொலை என பரபரப்பு வாக்குமூலம்

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தொழிலதிபர் கொலை வழக்கில் ஜோதிடர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரே கொலை செய்யப்பட்டவர் ஆவார். சேலம் செலவடியை சேர்ந்த ஜோதிடர் இளையராஜாவின் உதவியாளராக இருந்த பாலசுப்பிரமணியன் கடந்த ஞாயிறு அன்று மேட்டூர் அடுத்த முத்தம் பெருமாள் கோவில் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டு இருந்த போது ஒரே காரில் இளையராஜா மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் இருந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாலசுப்பிரமணியத்தை கொலை செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஜோதிடர் இளையராஜாவின் மனைவிக்கும் பாலசுப்பிரமணியனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்தது.  

இதன் காரணமாகவே ஜோதிடர் இளையராஜா தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலசுப்பிரமணியத்தை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார், கொலையில் தொடர்புடைய மேலும் இருவரை கைது செய்தனர். மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார், இச்சக்கர வாகனம் மற்றும் நையலான் கயிற்றை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Tags : Businessman ,Mettur , Murder , businessman ,Mettur ...
× RELATED வடுவூர் அருகே பைக் மீது லாரி மோதி வியாபாரி பலி