சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு: பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு தந்த வழக்கு என்ஐஏ-வுக்கு மாற்றம்

கன்னியாகுமரி: ஜனவரி 8-ம் தேதி களியக்காவிளை சோதனை சாவடி அருகே சிறப்பு எஸ்.ஐ. வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டு வாங்கிக் கொடுத்ததாக 10 பேரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டு வாங்கிக் கொடுத்த வழக்கு என்ஐஏ.-வுக்கு மாற்றப்பட்டுள்ளது. கன்னியாகுமரி களியக்காளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த எஸ்.ஐ. விசல்னை கடந்த 8-ந் தேதி அப்துல் சமீம், தவ்ஃபிக் ஆகிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

பின்னர், இருவரும் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இருவர் மீதும் உபா சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், இவ்வழக்கு விசாரணை நாகர்கோவில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த 2 தீவிரவாதிகளும் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உதவியதாக பெங்களூரு, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் தீவிரவாதிகளுக்கு சிம்கார்டுகளை வாங்கி கொடுத்த 6 பேரும் சிக்கினர். இந்நிலையில் தீவிரவாதிகளுக்கு சிம்கார்டு வாங்கி கொடுத்த வழக்கு தற்போது தேசிய புலனாய்வு ஏஜென்சியாக என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு வெளிநாட்டு தொடர்புகள் இருக்கலாம் என்பதால் வில்சன் கொலை தொடர்பான அனைத்து வழக்குகளுமே விரைவில் என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: