எம்எல்ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் சபாநாயகரின் அதிகாரத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்: உச்ச நீதிமன்றம் பரிந்துரை

புதுடெல்லி: மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவான ஷியாம்குமார், பின்னர் பாஜ.வுக்கு தாவி வனத்துறை அமைச்சராக  பதவி பெற்றுள்ளார். அவரை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு நீதிபதிகள் நாரிமன் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘இவ்விவகாரத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் 4 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும். சபாநாயகர்கள் கட்சிகளை சார்ந்தவர்களாக இருக்கின்றனர். அவர்கள் எம்பி, எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரத்தை நாடாளுமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். எம்பி, எம்எல்ஏக்கள் மீதான தகுதிநீக்க மனுவை ஆய்வு செய்ய சுதந்திரமான நடைமுறை கொண்டு வரலாம்,’ என பரிந்துரைத்தனர்.

Related Stories: