சிரோமணி அகாலி தளம் திடீர் முரண்டு நள்ளிரவில் வெளியானது பாஜ வேட்பாளர் பட்டியல்: கெஜ்ரிவாலை எதிர்த்து சுனில் யாதவ் போட்டி

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தனது கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளம் கடைசி நேரத்தில் ேபாட்டியிட மறுத்ததால், பாஜ.வின் 2வது வேட்பாளர் பட்டியல் நள்ளிரவில் ெவளியிடப்பட்டது. இதில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பாஜ சார்பில் சுனில் யாதவ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். டெல்லியில் மொத்தமுள்ள 70 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று மாலையுடன் முடிந்தது. தேர்தலில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களின் முதல் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில். வேட்பு மனு செய்வதற்கான கடைசி நாளில் வேட்பாளர்களின் 2வது பட்டியலை பாஜ நேற்று வெளியிட்டது.  இதில், 10  வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். புதுடெல்லி தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜ சார்பாக யுவமோர்சா தலைவர் சுனில் யாதவ் நிறுத்தப்பட்டுள்ளார்.

பாக்கா ஹரிநகர் தொகுதியில் டெல்லி பாஜ செய்தி தொடர்பாளர் தஜிந்தர்பால் சிங்கும், டெல்லி கன்டோன்ட்மென்ட் தொகுதியில்  புர்வான்சல் மோர்ச்சா தலைவர் மணீஷ் சிங்கும் போட்டியிடுகின்றனர். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிரோமணி அகாலிதளம் இடம் பெற்றுள்ளது. வழக்கமாக, டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் இக்கட்சிக்கு கால்காஜி, ஷத்ரா, ரஜோரி கார்டன் உள்ளிட்ட 4 தொகுதிகளை பாஜ ஒதுக்குவது வழக்கம். ஆனால், இத்தேர்தலில் போட்டியிடவில்லை என சிரோமணி அகாலி தளம் நேற்று முன்தினம் கடைசி நேரத்தில் அறிவித்தது. இதனால், அடுத்த சிலமணி நேரத்தில், நள்ளிரவில் இந்த 4 தொகுதிகளுக்கும் சேர்த்து தனது வேட்பாளர்கள் பட்டியலை பாஜ வெளியிட்டது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, இத்தேர்தலில் சிரோமணி அகாலி தளம் போட்டியிடவில்லை என்று காரணம் கூறப்பட்டுள்ளது. தனது மற்றொரு கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துக்கு புராரி, சங்கம் விகார் தொகுதிகளையும், லோக் ஜனசக்திக்கு சீமாபுரி தொகுதியும் பாஜ ஒதுக்கியுள்ளது.

Related Stories: