டோக்கன் நம்பர் 45 6 மணி நேரம் காத்திருப்பு: கெஜ்ரிவால் மனுத்தாக்கல்

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கெஜ்ரிவால் நேற்று முன்தினம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய முடிவு செய்திருந்தார். ஆனால், அவரது தலைமையில் நடந்த பேரணி நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதால், அவரால் வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியாமல் போனது. இதனால் நேற்று மனுத்தாக்கல் செய்ய அவர் முடிவு செய்தார். மனுத்தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று ஏராளமான சுயேச்சை வேட்பாளர்கள் வந்திருந்தனர். இதனால் முன்கூட்டியே வந்தபோதும் அவருக்கு 45வது எண் டோக்கன்தான் கிடைத்தது. இதனால் சுமார் 6 மணி நேரம் வரை காத்திருந்து, மாலை 6.30 மணிக்கு அவரால் வேட்புமனு தாக்கல் செய்ய முடிந்தது.

Advertising
Advertising

வரிசையில் காத்திருந்தபோது கெஜ்ரிவால் பதிவிட்ட டிவீட்டில், “வேட்புமனு தாக்கல் செய்ய காத்திருக்கிறேன். 45வது எண் டோக்கன் கொடுத்துள்ளார்கள். பலரும் மனுத் தாக்கல் செய்ய வந்துள்ளனர். ஜனநாயகத்தில் பங்கெடுக்க இவ்வளவு பேர் முன்வந்துள்ளது எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது” எனக் கூறியிருந்தார். ஆனால், அவரது கட்சியின் மூத்த தலைவரும், துணை முதல்வருமான சிசோடியா கூறுகையில், வேண்டுமென்றே சிலர் மனுத் தாக்கல் செய்ய வந்துள்ளனர். அவர்களிடம் முறையான ஆவணங்கள் கூட இல்லை. அவர்கள் கெஜ்ரிவாலை மனுத் தாக்கல் செய்ய அனுமதிக்க மாட்டார்கள்’’ என்று கொந்தளித்தார்.

Related Stories: