சில்லி பாயின்ட்...

* இந்திய அணி தொடக்க வீரர் ஷிகர் தவான் தோள்பட்டை காயம் காரணமாக நியூசிலாந்து டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். கணுக்காலில் காயம் அடைந்துள்ள வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மா நியூசி. டெஸ்ட் தொடரில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.
* இலங்கைக்கு எதிராக ஹராரேவில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில், ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 358 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கிரெய்க் எர்வின் 85, கசுஸா 63, மஸ்வாரே 55, திரிபானோ 44* ரன் விளாசினர். இலங்கை பந்துவீச்சில் எம்புல்டெனியா 5, லக்மல் 3, குமாரா 2 விக்கெட் வீழ்த்தினர்.
* நியூசிலாந்து அணியுடன் 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் மோதவுள்ள இந்திய அணி வீரர்கள் நேற்று ஆக்லாந்து சென்று சேர்ந்தனர். இந்தியா - நியூசி. மோதும் முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் நாளை மறுநாள் இந்திய நேரப்படி பிற்பகல் 12.30க்கு தொடங்குகிறது.
* ‘நியூசிலாந்து ஆடுகளங்களின் தன்மை தற்போது வெகுவாக மாறிவிட்டது. ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி இந்த முறை நிச்சயம் சாதிக்கும்’ என்று முன்னாள் நட்சத்திரம் சச்சின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
* உத்தரப்பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சி லீக் ஆட்டத்தில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 353 ரன் எடுத்துள்ளது. லால்வானி 43, தமோர் 51, சித்தேஷ் லாட் 98 ரன் விளாசினர். சர்பராஸ் கான் 132 ரன், கேப்டன் தாரே 9 ரன்னுடன் களத்தில் உள்ளனர். முன்னதாக, உ.பி. அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 625 ரன் குவித்து டிக்ளேர் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags : All Sports
× RELATED சில்லி பாயின்ட்...