வாலிபருக்கு கத்திக்குத்து

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரை சேர்ந்தவர் சரத்குமார் (21). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (22). செல்போன் காணாமல் போனது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு சரத்குமார் நடந்து வந்தபோது ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அங்கு வந்து சரத்குமாரை வழிமடக்கி தகராறு செய்துள்ளனர். பின்னர் திடீரென 3 பேரும் சேர்ந்து சரத்குமாரை சரமாரி கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றனர். இதில் ரத்தவெள்ளத்தில் சாய்ந்த சரத்குமாரை அப்பகுதியினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின்பேரில் ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் மற்றும் நண்பர்களை தேடி வருகின்றனர்.

Tags : plaintiff , Shout out , plaintiff
× RELATED வாலிபருக்கு கத்திக்குத்து