×

பட்டாக்கத்தியுடன் உலா வந்த சிறுவன் உள்பட 3 பேர் கைது

அண்ணாநகர்: பட்டாக்கத்தியுடன் உலா வந்த சிறுவன் உட்பட 3 பேரை பிடித்து விசாரிக்கின்றனர். அண்ணாநகர், 3வது அவென்யூவில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் 3 பேர் உலா வந்தனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது பட்டாக்கத்தி இடுப்பில் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்து பறிமுதல் செய்தனர். பின்னர், 3 பேரையும் அண்ணாநகர்  காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில் பிரகாஷ் (23), நந்தகுமார் (19) மற்றும் ஒரு சிறுவன் என தெரிய வந்தது. மேலும் இரவு நேரத்தில் கத்தியுடன் ஏன் சுற்றி வந்தனர்? வழிப்பறி கொள்ளையர்களா? தனியாக நடந்து செல்லும்போது மக்களை மிரட்டி பணம் பறிப்பவர்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Three arrested, boy ,sword
× RELATED உலகையே உலுக்கிய 3 வயது சிறுவன் அய்லான்...