பழைய வாகன விற்பனை நிறுவனத்தில் 3 லட்சம், சொகுசு கார் திருட்டு

பெரம்பூர்: கொளத்தூரில் பழைய கார்களை வாங்கி விற்கும் நிறுவனத்தில் ₹3 லட்சம் ெராக்கம் மற்றும் காரை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொளத்தூர் பார்வதி அம்மன் நகர் 200 அடி சாலையில் பழைய கார்களை வாங்கி விற்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் முருகன் (49). நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் வழக்கம்போல முருகன் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

Advertising
Advertising

நேற்று காலை 10 மணிக்கு கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நிறுத்தி வைத்திருந்த சொகுசு கார் மற்றும் பீரோவில் இருந்த 3 லட்சம் பணம் மற்றும் 64 கார் சாவிகள் திருடப்பட்டு இருந்தது தெரிந்தது. மேலும் சிசிடிவியில் பதிவாகும் காட்சிகளை சேமித்து வைக்கும் கருவியையும் கொள்ளையர்கள் திருடி சென்றிருந்தனர். இதுகுறித்து முருகன் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: