சேரன்மகாதேவியில் பி.எச்.பாண்டியனுக்கு நினைவு மண்டபம்: படத்திறப்பு விழாவில் அறிவிப்பு

வீரவநல்லூர்:  நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவியை அடுத்த கோவிந்தப்பேரியில் மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் படத்திறப்பு விழா நேற்று நடந்தது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமை வகித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று, பி.எச்.பாண்டியன் படத்தை திறந்து வைத்து பேசியதாவது:  அதிமுகவில் மூத்த தலைவர்களாக இருந்து தற்போது அரசியலில் இருந்து விலகிய அனைவரும் அதிமுகவிற்கு மீண்டும் வர வேண்டும். கட்சியின் நோக்கம் நிலைத்து நீடித்து இருக்க தூணாக இருந்து பி.எச்.பாண்டியன் அடித்தளமிட்டவர். ஜெயலலிதா மறைந்த நேரத்தில் அதிமுக தனிப்பட்ட குடும்பத்தின் ஆதிக்கத்தில் சென்று விடக்கூடாது என முதன்முதலில் குரல் கொடுத்தவர் பிஎச் பாண்டியன். இந்த இயக்கத்தை காப்பாற்றிய முன்னணி தலைவர் பிஎச் பாண்டியன். நான் இந்த நிலைக்கு உயர அவரை போன்ற தலைவர்கள் தான் காரணம். அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சேரன்மகாதேவியில்  விரைவில் நினைவு மண்டபம் கட்டப்படும். நானே முன்னின்று கட்டி முடிப்பேன் என்றார்.

Related Stories: