பொருளாதார நிலை, வேலைவாய்ப்பு சரிவு மக்களிடம் விளக்க 28ம் தேதி முதல் ராகுல் பேரணி

புதுடெல்லி: நாட்டின் பொருளாதார நிலை மோசமாக இருப்பது சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எப்) கணிப்பில் தெரியவந்துள்ளது. ஆனால், மத்திய அரசு இது தொடர்பாக இன்னமும் தனது கருத்தை தெரிவிக்காவிட்டாலும், நாடு வளர்ச்சிப் பாதையில் சென்றுக் கொணடிருப்பதாகவே கூறி வருகிறது.       இந்நிலையில், ஐஎம்எப் கணிப்பை அடிப்படையாக கொண்டு, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மத்திய அரசை சாடியிருந்தார். தற்போது அவர், நாட்டின் பொருளாதார நிலை மற்றும் வேலைவாய்ப்பு சரிவு ஆகியவை குறித்து மக்களிடம் விளக்கி கூற வரும் 28ம் தேதி முதல் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்த முடிவு செய்துள்ளார். இதன்படி, வரும் 28ம் தேதி முதல் கூட்டம், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடக்கிறது. இதைத்தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் விவசாயிகள், பழங்குடியினர், கிராமப்புற தொழிலாளர்கள் ஆகியோர் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து உரையாற்ற உள்ளார்.

Related Stories: