பெங்களூரு, ஜன.22: செல்போன் பயன்பாட்டிற்காக ஜிபிஎஸ்,சை போன்ற டிஜிட்டல் வழிகாட்டி தளத்தை உருவாக்கி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. இஸ்ரோ தலைவர் சிவன் சமீபத்தில் பேட்டி அளிக்கையில், ‘செல்போன்களின் பயன்பாட்டிற்காக ஜிபிஎஸ் போன்ற புதிய தளத்தை அறிமுகம் செய்வோம்,’ என அறிவித்தார். அதன்படி, தற்போது இஸ்ரோ செல்போன்கள் பயன்பாட்டிற்கான ஜிபிஎஸ் போன்ற புதிய தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், இருப்பிடங்களை மிக எளிதாக அறிந்து கொள்ள முடியும். அமெரிக்காவின் ஜிபிஎஸ், ரஷ்யாவின் கிளோனாஸ் மற்றும் ஐரோப்பாவின் கலிலியோ சிஸ்டத்திற்கு இணையாக, இந்தியாவின் இந்த வலைதளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தியாவில் சந்தைக்கு வரும் புதிய செல்போன்கள் அனைத்தும் இஸ்ரோவின் இந்த சிஸ்டத்துடன் செயல்படும் என்பதால், செல்போன் துறையில் இந்தியாவும் தனித்துவம் பெற்றுள்ளது.