×

செல்போனில் பயன்படுத்துவதற்காக ஜிபிஎஸ்சை போன்று டிஜிட்டல் வழிகாட்டி: இஸ்ரோ புதிய சாதனை

பெங்களூரு,  ஜன.22: செல்போன் பயன்பாட்டிற்காக ஜிபிஎஸ்,சை போன்ற டிஜிட்டல் வழிகாட்டி தளத்தை உருவாக்கி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. இஸ்ரோ  தலைவர் சிவன் சமீபத்தில் பேட்டி அளிக்கையில், ‘செல்போன்களின்  பயன்பாட்டிற்காக ஜிபிஎஸ் போன்ற புதிய தளத்தை அறிமுகம் செய்வோம்,’ என  அறிவித்தார். அதன்படி, தற்போது இஸ்ரோ செல்போன்கள் பயன்பாட்டிற்கான ஜிபிஎஸ் போன்ற புதிய தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், இருப்பிடங்களை மிக எளிதாக அறிந்து கொள்ள முடியும். அமெரிக்காவின் ஜிபிஎஸ், ரஷ்யாவின்  கிளோனாஸ் மற்றும் ஐரோப்பாவின் கலிலியோ சிஸ்டத்திற்கு இணையாக, இந்தியாவின்  இந்த வலைதளம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தியாவில் சந்தைக்கு வரும்  புதிய செல்போன்கள் அனைத்தும் இஸ்ரோவின் இந்த சிஸ்டத்துடன் செயல்படும் என்பதால், செல்போன் துறையில் இந்தியாவும் தனித்துவம் பெற்றுள்ளது.

இதற்கு  முன்பு ஜிபிஎஸ் சிஸ்டத்திற்காக அமெரிக்காவின் உதவியை இந்தியா நம்பி இருந்தது. இந்தியாவின் சொந்த நேவிக் சிஸ்டத்தினால் செயலிகள் (ஆப்ஸ்), ஜியோ லொகேசன்  (இருப்பிடம் தேடுதல்) உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.  சீனாவின் ஜியாமி நிறுவனம் தயாரிக்கும் செல்போன்கள் இந்தியாவின் நேவிக்  சிஸ்டத்தில் இயங்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளன. இஸ்ரோவின் இந்த  புதிய சாதனை, செல்போன் பயனாளிகளுக்கு மட்டும் இன்றி நாட்டின் உள்நாட்டு   பாதுகாப்புக்கும் பயனுள்ளதாக அமையும்.



Tags : ISRO , Cell phone, GPS, Gittal guide, ISRO
× RELATED 8 இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு