ககன்யான் திட்டம் இந்திய டாக்டர்களுக்கு பிரான்சில் பயிற்சி

புதுடெல்லி: மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதில் 3 வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர்.    வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் சமயத்திலும், அதற்கு முன்பாகவும் அவர்களின் உடல்நிலையை பரிசோதிக்க இந்திய டாக்டர்களுக்கு பிரான்சில் 2 வார பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் அடுத்த சில நாட்களில் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி, விமானப்படை டாக்டர்களுக்கு பிரான்ஸ் பயிற்சி அளிக்க உள்ளது.

Related Stories: