500 லஞ்சம் தராததால் ஆத்திரம் 100 ஆண்டுக்கு முன்பிறந்ததாக சான்றிதழ்: உபி.யில் அதிகாரிகள் வெறித்தனம்

பெரெய்லி: உத்தரப்பிரதேச மாநிலம், பெலா கிராமத்தை சேர்ந்த தம்பதியர் 2 மாதங்களுக்கு முன் தங்கள் மகன்கள் சான்கெட் (2), சுப் (4) ஆகியோருக்கு பிறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தனர். அப்போது,  கிராம மேம்பாட்டு அதிகாரி சுசில் சந்த் அக்னிஹோத்ரி மற்றும் தலைவர் பிரவீன் மிஸ்ரா ஆகியோர் ஒவ்வொரு சான்றிதழுக்கும் ரூ.500 லஞ்சமாக தர வேண்டும் என கேட்டுள்ளனர். ஆனால், லஞ்சம் கொடுப்பதற்கு தம்பதியர் மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், ஜூன், 13, 2016 என சான்றிதழில் குறிப்பிடுவதற்கு பதிலாக ஜூன் 13, 1916 என்றும் ஜனவரி 6 2018ம் ஆண்டு என்பதற்கு பதிலாக ஜனவரி 6, 1918 என்றும் மாற்றி குறிப்பிட்டு பிறப்பு சான்றிதழ் அளித்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட தம்பதியின் உறவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கிராம மேம்பாட்டு அதிகாரி, தலைவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு பெரெய்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: