மூன்று ஆண்டுகள் கழித்து ஊராட்சி தலைவர் தலைமையில் 26ம் தேதி கிராம சபை கூட்டம்: 13 கருத்துகள் மீது விவாதம்

சென்னை: மூன்று ஆண்டுகள் கழித்து ஊராட்சி தலைவர் தலைமையில் வரும் 26ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களி் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட பிரநிதிகள் கடந்த 6ம் தேதி பதவியேற்று கொண்டனர். இந்நிலையில் மூன்று ஆண்டுகள் கழித்து கிராம ஊராட்சி தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் 13 கருத்துகள் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று ஊராக வளர்ச்சி துறை இயக்குனர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறிருப்பதாவது : அரசு உத்தரவின் படி வரும் குடியரசு தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். இதில் கிராமங்களில் 1.102019 முதல் 31.12.2019 வரை செய்யப்பட்ட செலவினங்களுக்கு ஒப்புதல் பெற வேண்டும். ஊரக பகுதிகளில் உள்ள அரசு, தனியார் மற்றும் அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குடிமராமத்து மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட வேண்டிய நீர்நிலைகள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல் மற்றும் கொசு உற்பத்தியை தடுத்ததால், பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்தல், தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும். மத்திய அரசின் 14 வது நிதிக்குழு மானியம் பெறுவதற்கான திட்டத்தை தயாரிக்க மக்கள் திட்டமிடுதல் இயக்கம் அமைக்க வேண்டும். பிரதம மந்திரி குடியுருப்பு திட்டம், பிரதம மத்திய ஊரக சாலைகள் திட்டம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், ஜல்சக்தி அபியான் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் தொடர்பாக விவாதம் நடத்தி அது தொடர்பாக அறிக்கைகளுக்கு கிராம சபையின் ஒப்புதல் பெற வேண்டும்.

Related Stories: