நாளை முதல் 5 நாட்கள் சென்னையில் சிஐடியு அகில இந்திய மாநாடு: கேரள அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை: இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) 14வது அகில இந்திய மாநாடு 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கிறது. இதுதொடர்பாக மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது: மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை சிஐடியுவின் அகில இந்திய மாநாடு நடைபெறும். அதன்படி 16வது அகில இந்திய மாநாடு ஜனவரி 23 முதல் 27ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது. அனைத்து ஊழியர்களுக்கும் ரூ.21,000 வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3,000 வழங்க வேண்டும். ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடக்கிறது.  

மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில், சிஐடியு அகில இந்திய தலைவர் ஹேமலதா உள்பட எல்பிஎப், ஏஐடியுசி, எச்எம்எஸ், ஐஎன்டியுசி உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்தவர்கள் உரையாற்றுகின்றனர். 24, 25, 26ம் தேதிகளில் விவாதம் நடைபெறும். மாநாட்டின் கடைசி நாளான 27ம் தேதி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்கும் பேரணி நடைபெறும். இதில் சிஐடியு தலைவர்கள், கேரள மாநிலத்தின் தொழிலாளர் துறை அமைச்சர் டி.பி.ராதாகிருஷ்ணன், கேரள மீன்வளத்துறை அமைச்சர் மெர்சிகுட்டி அம்மா உள்பட ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

* பிரதிநிதியாக ஜார்கண்ட் முதல்வர்

மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து சிஐடியுவைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். இதில் ஜார்கண்ட் மாநில நிலக்கரி தொழிலாளர் சங்க துணைத்தலைவராக இருக்கும் அம்மாநில முதல்வர் ஹேமந்த் பிரதிநிதியாக பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: