திருவலம் பேரூராட்சியில் போக்குவரத்திற்கு லாயக்கற்ற தரைப்பாலம்

திருவலம்: காட்பாடி தாலுகா திருவலம் பேரூராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிமக்கள் பெல், பெல் ஆன்சிலரி, சிப்காட், ராணிப்பேட்டை பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கம்பெனிகளில் தினமும் வேலைக்கு சென்று வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகள் சைக்கிளில் சென்று வருகின்றனர். சீக்கராஜபுரம், நரசிங்கபுரம், பெல், தக்காம்பாளையம் பகுதிகளை சேர்ந்தவர்கள் திருவலத்திற்கு தங்களது அன்றாட தேவைகளுக்காக பொன்னையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆற்று தரைப்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பாலம் பாறைகளால் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மழைக்காலங்களில் ஏற்படும் பெரும் வெள்ளத்தினால் பாறைகள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.  எனவே இந்த தரைபாலத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: