தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிப்பது அரசியலமைப்பு கடமை மாநில அரசுகள் அதை எதிர்க்க முடியாது: மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி

டெல்லி: தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிப்பது அரசியலமைப்பு கடமை மாநில அரசுகள் அதை எதிர்க்க முடியாது என மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நாடு முழுவதும், 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்புடன் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) புதுப்பிக்கும் பணி வரும் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ம் தேதி வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான ஆலோசனை கூட்டம் ஒன்றும் சமீபத்தில் டெல்லியில் நடத்தப்பட்டது. தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி என்பது தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணிக்கான முன்னோடி நடவடிக்கையாக உள்ளதாக கூறி இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) பின்வாசல் வழியாக கொண்டு வரும் முயற்சியே தேசிய மக்கள் தொகை பதிவேடு என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதற்கு எதிராக தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி கருத்து தெரிவித்தார். தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிப்பது அரசியலமைப்பு கடமை மாநில அரசுகள் அதை எதிர்க்க முடியாது என கூறியுள்ளார்.

Related Stories: