சென்னை 43வது புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு: சுமார் 20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்

சென்னை: சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த 43வது புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவுபெறுகிறது. இதில் 13 நாட்களில் 20 லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளனர். அதுமட்டுமின்றி 20 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், கீழடி புத்தகங்களே அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முக்கியமாக 700க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு 13 நாட்களும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புத்தகங்களை பார்ப்பதற்கும், அதேபோன்று விற்பனையும் கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும் போது 20 கோடி ரூபாய் அளவிற்கு வந்துள்ளது. தொடர்ந்து, 43வது புத்தக கண்காட்சியில் விற்பனையும், வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தாலும் அரசு அதற்கான உரிய நடவடிக்கையாக ஒரு நிரந்தர புத்தக கண்காட்சி நடத்தக்கூடிய வகையில் ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என அங்குள்ள மக்கள் வலியுறுத்தியுள்ளனர். 43வது புத்தக கண்காட்சியில் லட்சக்கணக்கானோர் வருகை புரிவதோடு மட்டுமின்றி புத்தகங்களும் அதிகளவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது இளைஞர்கள் என பலரும் வந்துள்ளனர். கீழடி அறிக்கையானது 30 ஆயிரம் நகல்கள் செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு கீழடி - ஈரடி என்ற தலைப்பில் தான் 43வது புத்தக கண்காட்சியானது ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தொல்பொருள் அகழாய்வு மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட கீழடி சார்ந்த பொருட்கள், நகல்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து, தொல்லியல் துறையின் சார்பாக வெளியிடப்பட்டிருக்கக்கூடிய கீழடி அறிக்கையும் 24 மொழியில் வெளியிடப்பட்டிருந்தது. அதில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே 20 ஆயிரம் நகல்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் கிடைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே கீழடி முக்கிய தலைப்பாக இந்த புத்தக கண்காட்சியில் இருந்தது. பல்வேறு தலைப்புகளுக்கான புத்தங்கங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த புத்தக கண்காட்சியானது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக அங்கு வருகை புரிந்த மக்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: