நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளை மட்டுமே பாஜக அளிக்கும்: டெல்லி மக்களுக்கு கெஜ்ரிவால் துரோகம் செய்துள்ளார்...கவுதம் கம்பீர் பேச்சு

டெல்லி: நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை எதிர்கட்சிகள் அளிக்கின்றன என பாஜக எம்.பி., கவுதம் கம்பீர் தெரிவித்தார். 70 சட்டமன்ற  தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரேகட்டமாக வருகின்ற பிப்ரவரி 8ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காகத்தான்  தற்பொது ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் தொடர்ச்சியாக பல்வேறு ஆலோசனைகள் மற்றும் பிரச்சாரங்களில்  ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, ஆம் ஆத்மி கட்சி சார்பில் முழுமையாக 70 சட்டமன்ற பேரவைக்கும் எந்தெந்த வேட்பாளர்கள் என்பதை தேர்வு  செய்து அவர்களை அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி இன்று என்பதால், ஆம்ஆத்மி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை  தாக்கல் செய்ய உள்ளனர். நேற்று முன்தினம் கெஜ்ரிவாலின் உறுதிமொழி அட்டை என்ற பெயரில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு  பிரச்னையை கொண்ட தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி அரசு வெளியிட்டது. இதன் அடிப்படியிலும், மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும்  விதமாக எங்களுடைய தேர்தல் அறிக்கை இடம்பெறும்  என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி தேர்தல் வாக்குறுதி குறித்து பேசிய, முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜ., எம்.பி.யுமான கவுதம் கம்பீர், கடந்த 5  ஆண்டுகளில் டெல்லி மக்களுக்கு ஆம் ஆத்மியின் கெஜ்ரிவால் துரோகம் இழைத்துள்ளார் என்றார். மேலும், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகள்,  சுத்தமான குடிநீர், பஸ் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். ஆனால் அவரால் எதையும் நிறைவேற்ற முடியாது என்றார்.

டெல்லி சட்டசபை தேர்தலில், நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளை மட்டுமே, பா.ஜ., அளிக்கும். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து,  மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. டெல்லியை லண்டனாக மாற்றுவோம் என, எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். இதெல்லாம் நிறைவேற்ற முடியாத  வாக்குறுதிகள் என்பது மக்களுக்கு தெரியும் என்றும் கூறினார்.

டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வில் நல்ல வேட்பாளர்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் கட்சிக்காக மிகச் சிறப்பாக  செயல்படுவார்கள் என்றும் தெரிவித்தார். டெல்லி ஜே.என்.யூ., பல்கலை வன்முறை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இளைஞர்கள் நாட்டின்  எதிர்காலம். அவர்களை வைத்து அரசியல்வாதிகள் அரசியல் செய்யக்கூடாது. இளைஞர்களை சொந்த அரசியல் நலனுக்காக பயன்படுத்துவது மிகவும்  ஆபத்தானது எனக் கூறினார்.

Related Stories: