இந்த மீனின் விலை ரூ.13 கோடி!

நன்றி குங்குமம் முத்தாரம்

Advertising
Advertising

ஒவ்வொரு வருடமும் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மீன்கள் ஏலம் விடுவது வழக்கம். ஆயிரம், இரண்டாயிரம் என்றில்லாமல் கோடிகளில் மீன்கள் ஏலம் போகும். 2020-ம் வருடத்தின் முதல் ஏலம் கடந்த வாரம் அரங்கேறியது. அதில் ப்ளூஃபின் டுனா என்ற மீன் 193 மில்லியன் யென்னிற்கு ஏலம் போயிருக்கிறது. அதாவது 13 கோடி ரூபாய்.

இந்த மீனின் எடை 276 கிலோ. உணவுக்காகப் பயன்படுத்தப்படும் இந்த மீனில் பல அரிய மருத்துவ குணங்கள் இருக்கிறது. அதனாலேயே இது ஒரு கிலோ 7 லட்சம் யென்னிற்கு விற்கப்படுகிறது. கடந்த வருடம் 278 கிலோ எடையுள்ள டுனா மீன் ஒன்று 22 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. இதை கியூஷி கிமுரோ என்பவர் வாங்கியிருந்தார்.

Related Stories: