×

உலகின் மிகச் சிறிய பறவை

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

பறவைகளிலேயே மிகச் சிறிய பறவை எது என்று உங்களுக்குத் தெரியுமா? ஆங்கிலத்தில் Bee Hummingbird என்று அழைக்கப்படும் 5 சென்டிமீட்டர் நீளமும் 2 கிராம் எடையும் கொண்ட ஒரு ஓசனிச்சிட்டு வகைதான் பறவைகளில் மிகச் சிறியது. வழக்கமாக கியூபா நாட்டில் காணப்படும் இந்தப் பறவை உலகின் மிகச் சிறிய பறவை என்பது மட்டுமில்லாமல், உலகில் மிகச் சிறிய முட்டையை இடும் பறவையாகும்.

அனைத்து ஓசனிச்சிட்டுகள் போன்றும் இந்த Bee Hummingbird முன்னே பறப்பது மட்டுமில்லாமல், மேலே, கீழே மற்றும் பின்னே பறக்கக்கூடியது. நின்ற நிலையிலேயே அந்தரத்தில் மிதக்கும் திறனையும் இந்தப் பறவை கொண்டதாகும். இதில் என்ன சிறப்பு இருக்கும் என்று நீங்கள் யோசிக்கலாம். அப்படி மிதப்பதற்கு இந்தப் பறவை அதன் இறக்கைகளை ஒரே நொடியில் ஏறத்தாழ 80 தடவைகள் அடிக்க வேண்டும். இப்படி அதிவேகத்தில் அடிக்கும் இறக்கைகளை மனிதக் கண்களால் பார்க்கவே முடியாதுயென்றால் யோசித்துப் பாருங்கள். பொதுவாக இந்தப் பறவை ஒரு பூவிலிருந்து இன்னுமொரு பூவுக்கு மகரந்தத்தை எடுத்துச் செல்கிறது. ஆனால், அதன் சிறிய பரிமாணம் மற்றும் பறக்கும் திறன் காரணமாக ஒரு நாளில் மட்டுமே 1500 பூக்களைத் தொட்டுவிடுகின்றன.

Tags : world , The smallest bird in the world
× RELATED உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில்...