சக போட்டியாளார்களால் இழப்பு: ஊபர் ஈட்ஸ் ஆன்லைன் உணவு பிரிவை விற்க அந்நிறுவனம் முடிவு

சென்னை: இந்தியாவில் தனது ஊபர் ஈட்ஸ் ஆன்லைன் உணவு விற்பனை பிரிவை சக போட்டியாளரான ஸொமேட்டோவுக்கு ரூ.1224.25 கோடிக்கு விற்பனை செய்ய ஊபர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஸொமேட்டோ, சுவிக்கி ஆகிய உணவு விநியோக நிறுவனங்களின் கடும் போட்டியை சந்திக்க முடியாமல் ஊபர் ஈட்ஸ் இழப்பை சந்தித்து வருகிறது.

இதனால், தாய் நிறுவனமாக ஊபர் டாக்சி சர்வதேச பங்கு சந்தையில், தனது மதிப்பை இழக்கும் நிலை உருவானது. இதை தவிர்க்கும் நோக்கில், ஆன்லைன் உணவு விற்பனை பிரிவை விற்க முடிவு செய்ததாக ஊபர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஊபர் ஈட்ஸ் விற்கப்படுவதால், வேலை இழக்கும் ஊழியர்களுக்கு ஊபர் நிறுவனத்தில் மாற்றுப் பணிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள தலைமை செயல் அதிகாரி, டாக்சி சேவைகளில் கூடுதல் முதலீடு மற்றும் கவனம் செலுத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

Related Stories: