இந்தியாவில் வேலையின்மை சதவீதம் 7.5% ஆக அதிகரித்துள்ளது: கனிமொழி எம்.பி. ட்வீட்

சென்னை: நாட்டின் தொழில் உற்பத்தி வளர்ச்சி தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் 48 மாவட்டங்களில் இல்லாத வகையில் வேலையின்மை அதிகரித்துள்ளதுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஏராளமானோர் அந்த காலகட்டத்தில் பணி இழந்தனர். கடந்த 2017-2018 நிதி ஆண்டில், நாட்டில் ஒட்டுமொத்த வேலையின்மை சதவீதம் 6.1 ஆக உயர்ந்தது இது, நகரங்களில் 7.8 சதவீதமாகவும், கிராமங்களில் 5.3 சதவீதமாகவும் இருந்தது.

வேலைவாய்ப்பின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே நாட்டின் பொருளாதாரம் மிகவும் மந்த நிலையில் இருந்து வந்தது. கடந்த சில மாதங்களாக பொருளாதார வளர்ச்சி 7 ஆண்டுகளில் இல்லாத மந்த நிலையை அடைந்து 5 சதவிகிதமாக இருந்தது. நாட்டின் பொருளாதார மந்த நிலையை சரி செய்ய மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதனிடையே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நடப்பு ஆண்டில் 4.8% ஆக இருக்கும் என ஐ.எம்.எஃப் மதிப்பீடு செய்துள்ளது.

ஏற்கனவே இந்திய பொருளாதார வளர்ச்சி 6% சதவீதமாக இருக்கும் என கணித்திருந்த ஐ.எம்.எஃப் தற்போது அதை 1.3% குறைத்துள்ளது. உலக பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு ஏற்கனவே குறைவாகவே இருக்கும் என்று சர்வதேச செலவாணி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் வேலையின்மை சதவீதம் 7.5% ஆக அதிகரித்துள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; 2019-ம் ஆண்டு செப்டம்பர் - டிசம்பரில்  இந்தியாவில் வேலையின்மை சதவீதம் 7.5% ஆக அதிகரித்துள்ளது, படித்த வேலையற்ற இளைஞர்களின் சதவீதம் 60% ஆக உள்ளது.

2019-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதம் அளவுக்குச் சரியும் என்று சர்வதேச நிதியமான ஐஎம்எப் கணித்துள்ளது. இதை மத்திய அரசு கவனத்தில் கொண்டுவந்து சரி செய்ய வேண்டும், ஆனால் சரி செய்வார்களா ? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: