×

உக்ரைன் விமானத்தை டோர்-எம் 1 ரக ஏவுகணைகள் தாக்கின..: ஈரான் சிவில் விமான அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

மாஸ்கோ: உக்ரைன் விமானத்தை டோர்-எம் 1 ரக ஏவுகணைகள் தாக்கியதாக ஈரான் சிவில் விமான அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஈரானின் முக்கிய தளபதி அமெரிக்காவால் கொல்லப்பட்டதை அடுத்து இரு நாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அமெரிக்கா போர் விமானம் என நினைத்து, ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து புறப்பட்ட உக்ரைன் நாட்டு பயணிகள் விமானத்தை ஈரான் ராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தியது. 82 ஈரானியர்கள், 63 கனடா நாட்டினர் உள்பட 176 பேர் அந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். இது உலக அரங்கில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை விபத்து என முதலில் கூறிய ஈரான் அரசு உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக, விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதை ஒப்புக்கொண்டது. இதையடுத்து, இந்த விமான விபத்தில் தொடர்புடையர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தவறுதலாக சுட்டுவீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானம் டோர்-எம்1(Tor-M1 missiles) என்ற இரண்டு குறுகிய நிலை ஏவுகணைகளால் தாக்கப்பட்டதா ஈரான் சிவில் விமான அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள முதற்கட்ட விசாரணையின் 2வது அறிக்கையில், ஜனவரி 8ம் தேதி உள்ளூர் நேரப்படி 06:12 மணிக்கு தெஹ்ரானின் இமாம் காமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பின்னர், உக்ரைன் விமானம் சுமார் 8,100 அடியில் கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய அனைத்து தொடர்புகளையும் இழந்துவிட்டதாகவும், 6.15 மணிக்கு இரண்டாவது ரேடார் காண்காணிப்பு திரையிலிருந்தும், 6.18 மணிக்கு முதன்மை கண்காணிப்பு திரையிலிருந்தும் மறைந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வடக்கிலிருந்து, போயிங் 737-800 விமானத்தின் மீது இரண்டு டோர்-எம்1(தரை முதல் வான்வழி) ஏவுகணைகள் வீசப்பட்டன, என குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Ukraine ,Iran ,airliner ,Tor-M1 , Ukraine, aircraft, missile, Iran, United States
× RELATED ரஷ்யாவில் வாக்குச்சீட்டில் ‘போர்...