×

கார்த்தி சிதம்பரம், மனைவி ஸ்ரீநிதி மீதான வருமானவரித்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய ஐகோர்ட் இடைக்காலத் தடை

சென்னை: கார்த்திக் சிதம்பரம் அவரது மனைவி ஸ்ரீநிதி மீது கீழ் கோர்ட் குற்றச்சாட்டு பதிவு செய்ய 27-ம் தேதி வரை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை அருகே முட்டுக்காட்டில்  நிலம் விற்றதில் கணக்கை மறைத்ததாக கார்த்திக் சிதம்பரம் அவரது மனைவி ஸ்ரீநிதி மீது வருமானவரித்துறையின் வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சொத்து விற்பனை மூலம் கிடைத்த ரூ.7.73 கோடி வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.  

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மற்றும
அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகிய இருவரும், பழைய மாமல்லபுரம் சாலையில் முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்கு சொந்தமான சொத்துகளை கடந்த 2015-ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளனர். இந்த விற்பனை மூலம் பெற்ற 7 கோடியே 73 லட்சம் ரூபாயை வருமான வரி கணக்கில் காட்டாமல் மறைத்ததாக, கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் பதிவுக்காக இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தங்களுக்கு எதிரான இந்த வழக்கை, சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிர்த்து, கார்த்தி சிதம்பரமும், ஸ்ரீநிதியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கார்த்திக் சிதம்பரம் அவரது மனைவி ஸ்ரீநிதி மீது கீழ் கோர்ட் குற்றச்சாட்டு பதிவு செய்ய 27-ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்தது.

Tags : Court ,Srinidhi ,Karthi Chidambaram , Karthi Chidambaram, wife Srinidhi, income tax department, interim injunction
× RELATED காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்...