370வது சட்டப் பிரிவு நீக்கம் தொடர்பான வழக்கு: உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இன்று விசாரணை

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. மத்திய அரசு கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சட்டப்பிரிவு 370 நீக்கத்தை கண்டித்து பலரும் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை நீக்கி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதற்கும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இதனை தொடர்ந்து, சட்டப்பிரிவு 370ஐ நீக்கும் தீர்மானத்திற்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ததை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல். சர்மா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் 370-ஐ ரத்து செய்து குடியரசுத் தலைவர் வழங்கிய ஒப்புதல், அரசியல் சாசனத்திற்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இம்மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பாக பதிலளிக்க கேட்டு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கு நாளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணா, சஞ்சய் கிஷன் கவுல், சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது.

Related Stories: