மறுவாக்கு எண்ணிக்கை கோரியவர்களின் வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் : ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடந்தபோதே மறு வாக்கு எண்ணிக்கைக்கு மனு கொடுத்தவர்களின் வழக்குகள்  மட்டுமே  விசாரிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மறைமுக தேர்தல் தொடர்பாக பல  வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும், மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என்று 25க்கும் மேற்பட்ட வழக்குகள்  தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் நீதிபதி ஆதிகேசவலு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி, உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடந்த போது மறுவாக்கு எண்ணிக்கைக்கு மனு கொடுத்தவர்கள் தாக்கல் செய்த வழக்குகள் மட்டுமே  விசாரிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு மறுவாக்கு எண்ணிக்கை கோரி மனு அளித்திருந்தால், அது ஏற்றுக் கொள்ளப்படாது. அதுதொடர்பான வழக்கை தேர்தல் வழக்காகத்தான் தொடர முடியும் என்று கூறியுள்ளார்.  ஒரு சில வழக்குகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

Related Stories: